Selliamman Trust - Selliamman Thirukovil
Selliamman Trust
About Us
செல்லி அம்மன் திருக்கோவில், தேன்குணம் கிராமம், கூவாடு போஸ்ட், உளுந்தூர்பேட்டை தாலுக்கா, விழுப்புரம் மாவட்டம்.

ஸ்ரீ கனகதாரணி கேட்டரிங் உரிமையாளர் டி .எஸ் சுந்தரராஜன் ஆகிய நான் மற்றும் என் குமாரன் எஸ்.சிவகுமார் ஆகிய நாங்கள் இருவரும் பொறுப்பேற்று உடன் பிறந்தவர்களின் மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்போடு 1998ஆம்  ஆண்டு ,மனை பூஜை செய்து , சுமார் பத்து வருடங்கள் எங்கள் இருவரின் சிறு சேமிப்பிலும் ,பக்தகோடிகளின் உபயத்திலும் உருவான புதியதாக நிறுவப்பட்டு 2008 மார்ச் 17 ஆம்  நாள் மஹாகும்பாபிஷகம் முடிவுற்று அ /மி .சிவா,விஷ்ணு, திருக்கோவில் அழகான அருள்பாலிக்கும் திருகோவிலாக காட்சி அளிக்கிறது.இப்படி புதியதாக நிர்மாணித்து அமையப்பெற்ற இத்திருக்கோவிலின் வளர்ச்சிக்குத்தான் தங்களின் நன்கொடைகள் மிகவும் உபயோகமாக உள்ளது.

இத்திருக்கோவிலின் நிர்வாகம் வளர்ச்சி செலவுடன் , சிறப்பு பூஜைகளின் போது ஏழைகளுக்கு உணவு வழங்குதல், யாத்திரிகர்களுக்கு தங்கும் வசதி , உணவு  ஏற்பாடு செய்தல் , பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடை , நோட்டுப் புத்தகம் , புத்தக வகைகள் ஏற்பாடு போன்ற சேவைகளை செய்ய தங்களின்  நன்கொடை நிதி பேருதவியாக உள்ளது . எங்களின் உழைப்பின் சிறு சேமிப்பிலும், வாடிக்கையாளர்களின் நிதி உதவியாலும் உருவாகி உயர்ந்த   இத்திருக்கோவில் (இச்சிறிய கிராமத்தில் இப்படிப் பட்ட அரியதொரு கோயிலா என்று ஆச்சரியப்படும் ஆதங்கப்படும்  அளவுக்கு அமைந்த ) அ /மி . கனகரத்ன தரணீஸ்வரி சமேத ரத்னபுரீஸ்வரர், அ/மி . ஸ்ரீ தேவி -பூதேவி சமேத ஆதி கேசவப்பெருமாள், அ/மி.சக்தி முக்தி மாரியம்மன் ஆகிய தெய்வங்கள் ஸ்தாபிதம் பெற்று - உடன் கோஷ்டங்கள் தெய்வங்களும், இஷ்ட தெய்வங்களும் இடம் பெற்று சிறந்து விளங்குகிறது இத்திருக்கோவில்.

மேலும் எங்கள் ஊரின் அருகாமையிலுள்ள திருநெல்அணை என்ற சிற்றூரின் அ/மி. நீலமலர் கண்ணம்மை சமேத வெண்ணையப்ப ஈஸ்வரர் சந்நிதியில், அருளிய பாட்டையும் வழிபாட்டையும் முடித்துக் கொண்ட ஸ்ரீ அப்பர் - சுந்தரர் இருவரும் இளைப்பாற இடம் தேடி அயர்ந்து தூங்கியது எங்களூர் மலைக்குன்று . இருவரும் அயர்ந்து தூங்கும் போது, சாய்வான மலைப்பாறையிலிருந்து தேனடை தானாகவே இளகி அந்நாவுக்கரசர்களின் நாக்கில் சொட்டியதால் விழித்து விரும்பி தேனை சுவைத்த அவர்கள் ஆஹா என்னே விந்தை தேனீக்கள் இட்ட தேனே இவ்வூரின் முதல் பதம் என்றும், இரண்டாம் பதம் குணம் என்றும், இரண்டையும் சேர்த்து தேன்குணம் என பெயர் பெறுக என்று மிகுந்த சந்தோஷத்துடன் உறைத்தனராம்!

இப்படி அவ்விரு ஞானிகளும் இளைப்பாறிய இடத்தில்தான் தனக்கென இடம் தேடி அமர்ந்து ஆட்சி புரிகிறார் அன்னை செல்லி! இதனால் தேன் குணம் கிராம மக்கள் பெரும் பாக்யம் பெற்றுள்ளோம். சுமார் நானு நானூறு ஆண்டுகளாக ஆறு ஏழு தலைமுறைகளாக ஆன்றோர்களால் பூஜிக்கப்பட்டுவரும் சுயம்புவான அன்னை தக்ஷிணேஸ்வரி செல்லியம்மன் திருக்கோவில் தான் இது! தென்திசை நோக்கி நின்ற வடிவில் நிறை ஆட்சி புரிபவர் தான் அன்னை செல்லையம்மன்; தென்திசை நோக்கி அன்னை அருள் பாலிப்பதால் தான் தக்ஷிணேஸ்வரி செல்லியம்மன் என்ற நாமதேயம் பூண்டார்.

Our Gallery
                         
Nagarathinam Angalammal Arts & Science Collge