ஸ்ரீ கனகதாரணி கேட்டரிங் உரிமையாளர் டி .எஸ் சுந்தரராஜன் ஆகிய நான் மற்றும் என் குமாரன் எஸ்.சிவகுமார் ஆகிய நாங்கள் இருவரும் பொறுப்பேற்று உடன் பிறந்தவர்களின் மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்போடு 1998ஆம் ஆண்டு ,மனை பூஜை செய்து , சுமார் பத்து வருடங்கள் எங்கள் இருவரின் சிறு சேமிப்பிலும் ,பக்தகோடிகளின் உபயத்திலும் உருவான புதியதாக நிறுவப்பட்டு 2008 மார்ச் 17 ஆம் நாள் மஹாகும்பாபிஷகம் முடிவுற்று அ /மி .சிவா,விஷ்ணு, திருக்கோவில் அழகான அருள்பாலிக்கும் திருகோவிலாக காட்சி அளிக்கிறது.இப்படி புதியதாக நிர்மாணித்து அமையப்பெற்ற இத்திருக்கோவிலின் வளர்ச்சிக்குத்தான் தங்களின் நன்கொடைகள் மிகவும் உபயோகமாக உள்ளது.
இத்திருக்கோவிலின் நிர்வாகம் வளர்ச்சி செலவுடன் , சிறப்பு பூஜைகளின் போது ஏழைகளுக்கு உணவு வழங்குதல், யாத்திரிகர்களுக்கு தங்கும் வசதி , உணவு ஏற்பாடு செய்தல் , பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடை , நோட்டுப் புத்தகம் , புத்தக வகைகள் ஏற்பாடு போன்ற சேவைகளை செய்ய தங்களின் நன்கொடை நிதி பேருதவியாக உள்ளது . எங்களின் உழைப்பின் சிறு சேமிப்பிலும், வாடிக்கையாளர்களின் நிதி உதவியாலும் உருவாகி உயர்ந்த இத்திருக்கோவில் (இச்சிறிய கிராமத்தில் இப்படிப் பட்ட அரியதொரு கோயிலா என்று ஆச்சரியப்படும் ஆதங்கப்படும் அளவுக்கு அமைந்த ) அ /மி . கனகரத்ன தரணீஸ்வரி சமேத ரத்னபுரீஸ்வரர், அ/மி . ஸ்ரீ தேவி -பூதேவி சமேத ஆதி கேசவப்பெருமாள், அ/மி.சக்தி முக்தி மாரியம்மன் ஆகிய தெய்வங்கள் ஸ்தாபிதம் பெற்று - உடன் கோஷ்டங்கள் தெய்வங்களும், இஷ்ட தெய்வங்களும் இடம் பெற்று சிறந்து விளங்குகிறது இத்திருக்கோவில்.




